தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகளை சீரமைக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.

by Editor / 13-03-2023 10:10:05pm
தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகளை சீரமைக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.

தென்காசி ஒன்றியத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.....

அனைத்து கிராமங்களிலும் நடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பழுதடைந்த  பள்ளி கட்டிடங்களை சீரமைக்க முதல்வர்  800  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இத் திட்டத்தின் மூலம்  பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு நல்ல காற்றோட்டம் உள்ள கட்டிடங்களை கட்டி மாணவர்கள் சிறப்பாக படிப்பதற்கு பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். தமிழகம் முழுவதும் அந்த பணிகள் தற்போது  துவங்கியுள்ளது .

இதனுடைய தொடர்ச்சியாக  100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்களுக்கு இந்த வேலையை உறுதி செய்வது ,எல்லா கிராமங்களுக்கும் அந்த திட்டம் போய் சேர வேண்டும். வேலை நாட்கள்  அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

தென்காசியில் உள்ள கிராம சாலைகள் 60 உள்ளது அதில் 16 சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகளை சீரமைக்க நான்காயிரம்  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 இந்த சாலைகளை இணைக்கும் பணிக்காக ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டுள்ளார் அதில் அரசு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை முதல்வரின் அறிவுரைப்படி எடுக்க இருக்கிறோம்.

மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  செய்து வருகிறோம். இந் மாவட்டத்தில் முத்தம்மாள் புரம் என்ற கிராமத்தில்  மழையால்   பாலம் மோசமான நிலைக்கு சென்றதால் 23 நாட்களில் அந்த கிராம மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது இது போன்ற இடத்தில் பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகிறோம்.

 தமிழகம் முழுக்க ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக பணிகளை நேரடியாக சென்று தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம் தமிழகம் முழுக்க எல்லா ஊராட்சி ஒன்றியங்களிலும் எல்லா திட்டங்களும்  நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்குடன்  இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.அடுத்த ஆண்டிற்கான  திட்டங்கள் பட்ஜெட்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும்.

 உள்ளாட்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.  அடிப்படை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  தேர்வு செய்வார். தமிழகத்தில் இந்த கோடையில் குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு இல்லை . நல்ல மழை  பெய்துள்ளது. இருந்தபோதிலும் தட்டுப்பாடு ஏற்படும் இடங்களுக்கு   கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் அதிக குடிநீர் வழங்க முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார் என்றார்.

முன்னதாக தமிழக ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தென்காசி ,கடையம் கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு  ரூ.45. 20 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கம் பகுதி இரண்டு 2023 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் டிராக்டர்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன்  சட்டமன்ற உறுப்பினர் கள் ராஜா,பழனி நாடார் ,சதன் திருமலை குமார் தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி.உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ,அனைத்து யூனியன் சேர்மன்கள் பலர் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via