அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்.

by Editor / 28-08-2023 09:10:44am
 அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை இன்று 28-ம் தேதி வரை நீட்டித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நேரில் இன்று ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர் ஆகிறார்.

 

Tags : அமைச்சர் செந்தில் பாலாஜி

Share via

More stories