தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு அழைப்பு

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags :