சாலை விபத்தில் 6 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று காலை சாலையில் வந்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்துள்ளதாகவும் கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :