இரண்டு கோடி மதிப்பிலான தங்க நகைகளை வாங்கி மோசடி செய்த திமுக கவுன்சிலரின் மகன் கைது

கடையநல்லூர் பகுதியில்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதி சேர்ந்த திமுக பெண் கவுன்சிலரின் மகனான முகமதுஇப்ராஹீம் (21) இவர் இந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ள இவர் தங்க நகைகளை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் செய்யதுஅலி என்பவர் நடத்தி வரும் நகைக்கடையில் ஏழு லட்சம் (1966.800 கிராம்) மதிப்பிலான நகைகளை விற்று தருவதாக வாங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அதற்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நகைக்கடைகாரர்செய்யதுஅலி என்பவர் கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது இப்ராஹீமை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டதில் இதே போன்று ஆறுக்கும் மேற்பட்ட நகைக்கடைகாரர்களிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகை வாங்கி விற்று தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட முகமது இப்ரஹீமை கைது செய்த கடையநல்லூர் காவல்துறையினர் மேலும் இது போன்று யாரிடமும் நகைகளை வாங்கி ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று கடையநல்லூர் பகுதியில் முறையான அனுமதி பெறாமல் நகைகடை வைத்திருப்பதும் அதே போன்று வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைக்கு முறையான ஜுஸ்டி பில் கொடுக்காமல் மோசடியில் ஈடுபடுவது, நகைகளை வாங்கி விற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடுவது இந்த பகுதியில் தொடர்கதையாக கதையாகத்தான் உள்ளது.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : இரண்டு கோடி மதிப்பிலான தங்க நகைகளை வாங்கி மோசடி செய்த திமுக கவுன்சிலரின் மகன் கைது