அ.தி.மு.க ஒர் ஊழல் கட்சி-. விஜய் கள்ள டிக்கெட் விற்பவர்-பகிரங்கமாக இருதரப்பு குற்றச்சாட்டு

by Admin / 27-01-2026 12:47:26am
அ.தி.மு.க ஒர் ஊழல் கட்சி-. விஜய் கள்ள டிக்கெட் விற்பவர்-பகிரங்கமாக இருதரப்பு குற்றச்சாட்டு

நேற்று வரை ...விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில், அதிமுகவை பற்றி எந்த வித கருத்தையும் கூறாமல் இருந்தவர்,  மாமல்லபுரத்தில் நடந்த செயல் வீரர் கூட்டத்தில், அ.தி.மு.க ஒர் ஊழல் கட்சி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவில் இருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் வெளிவர ஆரம்பித்தன. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்கிற நிலையில்.. ஒருத்தரை ஒருத்தர் விமர்சனம் செய்யாமல் மௌனம் காத்து வந்தனர். ஆனால், அ.தி.மு.க தரப்பு பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து.. பல்வேறு சிறிய கட்சிகளை தங்களோடு இணைத்து.. என் டி ஏ கூட்டணியாக உருப்பெற்று ,பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்திலும் பொதுக்கூட்டம் நடத்தி முடித்தாகி விட்ட நிலையில்... அதுவரை விஜயை- அவருடைய தமிழக வெற்றி கழகத்தை பற்றி எதுவுமே பேசாமல் இருந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர்தொடங்கி.. கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்களும் தங்கள் கூட்டணிக்கு விஜய் வர மாட்டார் என்பதை.. நேற்று அவர் பேசியதிலிருந்து அறிந்து கொண்டதனால் எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கினார்கள். விஜய் கள்ள டிக்கெட் விற்பவர் என்று விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர் .சமூக வலைத்தளங்களிலும் விஜயைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர். அ.தி.மு.கவை கூட்டணிக்குள் கொண்டுவர விஜய் முயற்சித்தாரா... இல்லை, விஜய்யை அ.தி.மு.கவிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதா... முதல் மாநாட்டிலேயே விஜய் தன் தலைமையிலான கூட்டணியில் வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு என்கிற கருத்தை முன் வைத்திருந்தார். ஆனால், அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவித்து அவர் தலைமையில் தமிழக வெற்றி கழகம் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அதிமுகவின் முக்கிய பிரபலங்கள் பேசினர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ,எந்த விதமான எதிர்வினைகளும் இரு பக்கத்தில் இருந்தும் வராத நிலையில்... நேற்றிலிருந்து யாராலும் யாருக்கும் பலன் இல்லை என்கிற நிலையில் கருத்துக்கள் தீவிரமாக வரத் தொடங்கிக் கொண்டிருக்கின்றன. தம்மோடும் தம் கட்சியோடும் யாரும் கூட்டணி வைத்துக் கொள்ளாத நிலையில் நாம் தனித்தே வெற்றி பெறுவோம் என்கிற நிலைப்பாட்டை பகிரங்கமாக தமிழக வெற்றி கழக மேடையில் பேச்சுக்கள் அரங்கேறின. இரு பக்கத்திலும் எதிர்பார்ப்புகள் இருந்திருக்கின்றன என்பது நேற்றைய இருதரப்பு எதிர்வினைகளின் வெளிப்பாடுநிருபித்தன. . அ.தி.மு.க தங்களுடைய அணி பலமாக இருப்பதாக... உறுதியான மனநிலைக்கு வந்திருக்கிறது. விஜயும் தனக்கு கூடுகின்ற கூட்டமும் தனக்கான விளம்பரமும் தான் ஆட்சி அமைக்க போவதற்கான அட்சரமாக கருதுகிறார்.டி.வி கே.க்கும் தி.மு.கவுக்கும் தான் போட்டி, களத்தில் இல்லாதவர்களை நாம் பேசப்போவதில்லை என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தேர்தல் களத்தில் சந்திக்கப் போவதில்லை என்கிற தொனியில் விஜய் பேசி இருந்தார். ஆனால், இப்பொழுது அவர் எதிர்பார்க்காத எதிரிகள் எல்லாம் களத்தில் உள்ளனர்.. இன்னும் ஒ.பி.எஸ்,தே.மு.தி.கவும்  பாட்டாளி கட்சி ராமதாஸ் அணியும் எந்த கட்சியிலும் இணையாமல் இருக்கின்ற நிலையில், அவர்களும் இருவரில் யாராவது ஒருவரோடு  கூட்டணி வைத்துவிட்டால் ...இரு கட்சிகளில் ஒரு கட்சிக்கு கூடுதல் பலம் .எப்படியோ ,பரபரப்பான அரசியலில் நான்கு முனை போட்டியாக தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories