உக்ரைன் மீதான தாக்குதல்களை கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டம்

by Admin / 28-02-2022 01:53:11pm
உக்ரைன் மீதான தாக்குதல்களை கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டம்

உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்ய அதிபர் புதின் கண்டித்து பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பேரணியில் திரளானோர் பங்கேற்றனர் அப்போது அவர்கள் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

தலைநகரில் நடந்த பேரணியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் போரை நிறுத்த வலியுறுத்தி பேதகை ஏந்தியிருந்த பொதுமக்கள் ரஷ்ய அதிபர் புதின் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

போரை முடிவுக்கு கொண்டுவர கோரி வடக்கு ஈராக்கில் வசிக்கும் உக்ரேனார்கள் எர்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வாசலில் போர் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர்.

இதேபோல் ஜப்பான் ஆஸ்திரேலியா தென்கொரியா துருக்கி ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories