பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

by Admin / 17-01-2022 05:19:33pm
பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

      


 
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி பத்மா, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள்கள் ராதிகா மற்றும் ரேணுகா, வாடாமல்லி என்பவரின் மகள் சகுந்தலா ஆகியோர் இணைந்து அருகிலுள்ள வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளனர். 

ஆற்றில் குளித்து கொண்டு இருந்த போது 4 பேரும் தண்ணீரில் திடீரென்று மூழ்கியுள்ளனர். இதனையடுத்து தண்ணீரில் மூழ்கிய 4 பேரின்  கூக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மா, ரேணுகா, சகுந்தலா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
ராதிகா மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக  வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது.


 

 

Tags :

Share via

More stories

Logo