இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும் -சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு .

by Editor / 13-03-2023 08:00:00am
இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும் -சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு .

நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாறினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் - சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி.

நாட்டில் தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வகையில் சோகோ நிறுவனத்தின் மூலம் 'ஸ்டார்ட் அப் தென்காசி' என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 தென்காசி நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் முனைவோர்கள் மற்றும் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

 இந்த நிகழ்வின்போது, இளைஞர்களும், தொழில் முனைவர்களும் நமது நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழ்நிலைகளை கூறி சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆர்வப்படுத்தினார்.

 தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, இளைஞர்கள் தாமாகவே முன்வந்து தொழில் தொடங்க முன்வர வேண்டும் எனவும், வெளிநாடுகளை மட்டும் நம்பி இருந்தால் நமது பொருளாதாரம் என்பது வளர்ச்சி அடையாது.

 நாம் தொழில் தொடங்கி நாம் பலருக்கு வேலை கொடுத்தால் தான் நமது பொருளாதரமும், நாட்டின் பொருளாதரமும் முன்னேற்றமடையும் எனக் கூறினார்.

 மேலும், பன்னாட்டு நிறுவனங்களிலோ, சாப்ட்வேர் நிறுவனங்களிலோ பணியாற்றுவதற்கு மொழி ஒரு தடையே இல்லை எனவும், இளைஞர்கள் நினைத்தால் ஆர்வத்துடன் நான்கு மாத கால அளவிலே அந்த மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள முடியும் அதற்கு அவர்கள் ஆர்வம் தேவை எனக் கூறினார்.

 அதேபோல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்துவதற்கு இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற முயற்சி செய்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என அவர் தெரிவித்தார்.

 

Tags : zoho sridhar vembu

Share via