அண்ணாமலைக்கு காய்ச்சல் பாஜக நிகழ்ச்சிகள் ரத்து-தொண்டர்கள் ஏமாற்றம்.

by Editor / 13-03-2023 07:53:00am
அண்ணாமலைக்கு காய்ச்சல் பாஜக நிகழ்ச்சிகள் ரத்து-தொண்டர்கள் ஏமாற்றம்.

அண்ணாமலைக்கு காய்ச்சல் பாஜக நிகழ்ச்சிகள் ரத்து-பாஜக தொண்டர்கள் ஏமாற்றம்.

கர்நாடக மாநில தேர்தல் பணிக்காக பெங்களூரு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தென்காசியில்  நேற்றும் ,இன்றும் அண்ணாமலை கலந்துகொள்ளவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தேதி குறிப்பிடப்பாடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பாஜகவின் தலைவராக  அண்ணாமலை பொறுபேற்றதில் இருந்து பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் உத்வேகம் பெற்றுள்ள நிலையில் அவர் தென்காசி வ்ருகை தென்மாவட்ட பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை உருவாக்கிய நிலையில் இதனை மெய்பிக்கும் வகையில் பாஜகவினர் அண்ணாமலையை வரவேற்று வழிநெடுகிலும் டிஜிட்டல் பேனர்களை வைத்து அசத்தியநிலையில் அவரது நிகழ்ச்சி ஒத்திவைக்கபட்டுள்ளதால் பாஜவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.மேலும் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா என்பவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனது உடல் நிலை சரியான உடன் தென்காசி நிகழ்ச்சிக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது, பெங்களூருவில் உள்ள நண்பரின் வீட்டில் அவர் ஓய்வு எடுப்பதாகவும், விரைவில் தமிழ்நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo