அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரியில் 2006 - 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பொன்முடியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் அவரது மகன் கவுதம் சிகாமணியின் சொத்துக்களும், அவர்களது குடும்பத்தினரும் சொத்துக்களுக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.