பிரதமர் மோடி நாளை மீண்டும் சென்னை வருகை

by Staff / 08-04-2024 11:25:06am
பிரதமர் மோடி நாளை மீண்டும் சென்னை வருகை

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக 6வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகை தரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் 2 நாட்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார். தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை பாஜக வேட்பாளர் பால கனகராஜ், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோருக்காக பிரதமர் வாக்கு சேகரிக்கவுள்ளார்.புதன்கிழமை வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதனால் சென்னை மற்றும் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via