என்சிபி மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை 2 பேர் கைது
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் (என்சிபி) தலைவருமான பாபா சித்திக் மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.வயிறு மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஜீஷன் சித்திக் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இரண்டு மூன்று சுற்றுகள் சுடப்பட்டன. அவருக்கு 15 நாட்களுக்கு முன்புதான் கொலை மிரட்டல் வந்தது, மேலும் அவர் 'ஒய்' பிரிவு பாதுகாப்பில் இருந்தார்.
போலீசார் பல்வேறு குழுக்களாக அப்பகுதிக்கு விரைந்துள்ளதால் மும்பையில் ஊரடங்கு போன்ற பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
பாபா சித்திக் கொலை தொடர்பாக 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருவதாக்வும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : என்சிபி மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை 2 பேர் கைது