ஆர்டிஓ பணியிடை நீக்கம்

by Staff / 22-11-2023 03:55:40pm
ஆர்டிஓ பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இருவரும் பணியிடை நீக்கம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 9 தேதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 9ம் தேதி மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் லதா மற்றும் ஷீலா தலைமையிலான அதிகாரிகள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில் அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினர். மேலும் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் , ஆய்வாளர்கள் , அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் என அனைவரிடமும் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கணக்கில் வராததால் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் இவர்களுடன் இருந்த இடைத்தரகர் மோகன் 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பொள்ளாச்சி ஆர்டிஓ பொறுப்பு அதிகாரியாக உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஆர்டிஓ நாகராஜ் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

Tags :

Share via