கன்னட மொழியில் பெயர் வைக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல்
கன்னட மொழியில் பெயர் வைக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் பெங்களுருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழல் நிலவிவருவதால் பிரபல மால்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள. நிறுவனங்களின் பெயர்கள் 60% கன்னட மொழியில் இருக்க வேண்டும் என ஏற்கனவே பெங்களூரு மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் பெயர் மாற்றம் செய்யாத நிறுவனங்களின் பெயர் பலகைகளை கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
Tags : கன்னட மொழியில் பெயர் வைக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல்