சென்னை  கால் டாக்ஸி ஓட்டுநர்கள்   நடு ரோட்டில்  கார்களை நிறுத்தி போராட்டம் 

by Editor / 02-07-2021 05:43:33pm
சென்னை  கால் டாக்ஸி ஓட்டுநர்கள்   நடு ரோட்டில்  கார்களை நிறுத்தி போராட்டம் 


சென்னை அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திடீரென கார்களை சாலையில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊபர் (UBER) மற்றும் ஓலா (OLA) நிறுவனங்களின் வாடகைக் கார் ஓட்டுநர்கள், அந்நிறுவனங்கள் தங்களிடமிருந்து பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் பகுதியில் காதிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் திடீரென மாலை நேரத்தில் கார்களை எடுத்துக்கொண்டு போராட்ட களத்தில் இருந்து கிளம்பிய ஓட்டுநர்கள் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே சாலையில் கார்களை நிறுத்திவிட்டு சாவிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
பின்னர் ஆங்காங்கே நின்று கொண்டு ஓட்டுநர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாலை நேரம் என்பதால் அலுவலகங்களை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாடகை கார்கள் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via