ராஜஸ்தானில் மனைவியை தோற்கடித்த கணவர்

by Staff / 04-12-2023 11:51:40am
ராஜஸ்தானில் மனைவியை தோற்கடித்த கணவர்

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்தலில் போட்டியிட்ட கணவன் மனைவியை தோற்கடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள தண்டராம்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வீரேந்திர சிங்கும், ஜேஜேபி சார்பில் அவரது மனைவி ரீட்டா சிங்கும் போட்டியிட்டனர். இதில், வீரேந்திர சிங் தனது மனைவியை தோற்கடித்தார். கடந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் வீரேந்திர சிங் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo