கடற்கரையில் பெண் பிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

by Staff / 17-08-2023 01:03:42pm
கடற்கரையில் பெண் பிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தஞ்சாவூர் அதிராம்பட்டினம்; அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமம் கடற்கரையோரத்தில் உள்ள அலையாத்திக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் சாவில் மர்மம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via