நெல்லை மாநகராட்சி 7 வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா ராஜினாமா-திமுக கவுன்சிலரின் ராஜினாமா கடிதம் செல்லாது- நெல்லை மாநகராட்சி ஆணையர்.

by Editor / 01-03-2024 04:42:38pm
நெல்லை மாநகராட்சி 7 வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா ராஜினாமா-திமுக கவுன்சிலரின் ராஜினாமா கடிதம் செல்லாது- நெல்லை மாநகராட்சி ஆணையர்.

நெல்லை மாநகராட்சி 7 வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா தன்னுடைய வார்டில் எந்த திட்டங்களும் செயல்படவில்லை பலமுறை கோரிக்கை வைத்தும்  நடவடிக்கை இல்லை..இதன் காரணமாக இந்த பதவி எனக்கு வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் தக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

திமுக கவுன்சிலரின் ராஜினாமா கடிதம் செல்லாது- நெல்லை மாநகராட்சி ஆணையர்

ஏழாவது வார்டில் பணிகள் நடைபெறவில்லை என்பது தவறான தகவல் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ரூ.90.47 லட்சம் மதிப்பீட்டில் 8 திட்டப்பணிகள் நிறைவேறி உள்ளது.ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்வி நிதியிலிருந்து பள்ளி கட்டிடம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

கவுன்சிலர் தனது ராஜினாமா கடிதத்தை மேயர் இடமே வழங்க வேண்டுமே தவிர என்னிடம் வழங்க கூடாது, ஆதலால் ராஜினாமா கடிதம் செல்லாது எனநெல்லை மாநகராட்சி ஆணையர் சுபம் ஞானதேவ் ராவ் அறிவிப்பு.


 

 

Tags : நெல்லை மாநகராட்சி 7 வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா ராஜினாமா.

Share via