கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்துவிடுங்கள் கனிமொழி

by Staff / 26-01-2023 01:26:42pm
கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்துவிடுங்கள்   கனிமொழி


மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் அதிகமாக பார்க்க தொடங்கியுள்ளனர் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். பார்க்காதே பார்க்காதே என்று கூறி அனைவரையும் பார்க்க வைத்துள்ளனர். நாம் ஜனநாயகம் காக்க ஒன்றிணைய வேண்டும். கல்வியை மறுபடியும் மாநிலப்பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். கடவுள் ஆதரவு, மறுப்பு உள்ள இரு பிரிவினரும் இந்த சமூகத்தில் வாழ இடம் இருக்கிறது. கடவுளை நம்பவில்லை என நான் சொன்னால் என்னை பேசவிடுங்கள். விவாதம் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடிப்படையானது என கூறினார்.

 

Tags :

Share via