முன்கூட்டிய விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு உபகாரங்களில் மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியலமைப்புச் சட்டம் 161 வது பிரிவின் கீழ் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு உபகாரங்களில் மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படி மட்டுமே அவர் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சரவின் முடிவு ஆளுநருக்கு பிடித்திருக்கிறதா.. இல்லையா.. என்பது முக்கியமல்ல எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைச்சரவையில் முடிவுக்கு மாறாக ஒரு முடிவை அவர் எடுக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பிற்கு முன் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளதா என்பது குறித்து இரு வேறு தீர்ப்புகள் இருந்ததால் இந்த விவகாரம் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம் அந்த முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Tags :


















