தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோரை தமிழக தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

by Admin / 02-04-2026 10:25:46pm
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோரை தமிழக தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இன்று தமிழக தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த ஜி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சந்திப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி யாக பணியாற்றி வரும் சந்திப்பு ராய் ரத்தோர் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேச்சு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. நாளை காலை இவர் முறைப்படி பதவி ஏற்க உள்ளார்.

 இவரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு அருள் தம்புராஜுவும், மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்ஷித்வும் தாம்பரம் காவல் ஆணையராக சஞ்சய் குமாரும் மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo