ஆம் ஆத்மி எங்களுக்கு ஒரு பொருட்டல்ல - அமித் ஷா

by Staff / 30-11-2022 02:36:00pm
ஆம் ஆத்மி எங்களுக்கு ஒரு பொருட்டல்ல - அமித் ஷா

குஜராத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கும் என்றும், மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடையாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அமித் ஷா பேசுகையில், "காங்கிரஸ் இன்னும் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது, ஆனால் அந்த கட்சி நெருக்கடியில் உள்ளது, அதன் பிரதிபலிப்பு குஜராத்திலும் தெரியும். குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி இல்லை. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் இடம் பெற மாட்டார்கள். பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும் என்றும்அமித் ஷா கூறினார்.குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5ஆம் தேதி நடக்கிறது. 8ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் குஜராத்தில் பிரச்சாரம் செய்ய வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via