பிரேமலு ஓடிடி தேதி அறிவிப்பு.. இந்த தளத்தில்தான் வெளியாகும்

by Staff / 01-04-2024 05:32:28pm
பிரேமலு ஓடிடி தேதி அறிவிப்பு.. இந்த தளத்தில்தான் வெளியாகும்

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவான திரைப்படம் 'பிரேமலு'. 'தண்ணீர்மதன் தினங்கள்', 'சூப்பர் சரண்யா' படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், பிரேமலு திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via