இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.. ரூ. 1,020 கோடி மதிப்பிலான திட்டங்களில், ரூ. 575 கோடி மதிப்பிலான முடிந்த திட்டப்பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன, மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது...சுமார் 24,000 பயனாளிகளுக்கு ரூ. 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவி பிரேமாவிற்கு வீடு கட்டும் பணியையும் முதல்வர் பார்வையிட்டார்..இந்த நிகழ்வு, வடக்கே உள்ள காசிக்கு இணையானது தென்காசி எனப் புகழ்ந்து கூறப்பட்டது.
முதலமைச்சரின் பயணம், தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
காலையில் சாலை மார்க்கமாக தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு செல்கையில் வழி நெடுகப் பொதுமக்களும் மாணவர்களும் உற்சாகமாக கையசைத்து சிலம்பம் சுற்றியும் வரவேற்ற நிலையில்,, . முதல்வர் மாணவர்களோடு உற்சாகத்தோடு சிலம்பம் சுற்றினார்....
Tags :


















