திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

by Editor / 07-07-2024 11:42:40am
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்  கூட்டம் அலைமோதியது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப மூகூர்த்த தினத்தை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆனி மாதம் வளர்பிறை சுப முகூர்த்த நாள் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள், மற்றும் மணமக்கள் அவர்களது குடும்பத்தினர்கள் என ஏராளமானோர்  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்துள்ளதுடன் பக்தர்கள் ஏராளமானோர்  கடல் மற்றும் நாழி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 அது மட்டுமல்லாது இன்று  சுப முகூர்த்த தினம் என்பதால்  ஏராளமான திருமணங்களும் கோவிலில் நடைபெற்றுவருகிறது. விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியதால் சுமார் 5 மணிநேரத்திற்கு மேல்  காத்திருந்து ஏராளமான பக்தர்கள்சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வழக்கம் போல் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via