இந்திய சீனா எடை 16 வது சுற்று பேச்சுவார்த்தை

by Staff / 01-06-2022 11:57:40am
இந்திய சீனா எடை 16 வது சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா சீனா இடையிலான ராணுவ தளபதிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய-சீன இருதரப்பு இராணுவமும் மோதிக்கொண்டதில் கடும் உயிர்சேதம்  இடம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு சீனாவில் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது என்ற போதும் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியா சீனா எல்லை விவகாரங்களுக்கான செயல் குழுவின் 24வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் அப்போது ராணுவ தளபதிகள் மட்டத்திலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories