திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்-வைகோ

by Admin / 24-01-2026 11:58:13pm
 திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்-வைகோ

இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளரை சந்தித்தபோது பிரதமர் மோடி தமிழகத்தில் பொய்களை பேசி விட்டு சென்றுள்ளார் என்றும் தமிழகத்திற்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியது தவறு என்றும் மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .மேலும் பிரதமரின் பேச்சை கடுமையாக விமர்சித்தவர் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக இல்லை என்றும் தெரிவித்ததோடு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தொகுதிகள் குறித்து பேச முடியும் என்றும்  தெரிவித்தார் .தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை பெறும் என்றும் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்என்றும் தெரிவித்தார். தி.மு.கவின் தேர்தல் பணிகளின் வேகத்திற்கு ஈடாக வேற எந்த கட்சியும் செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories