தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்: அன்புமணி

by Staff / 07-12-2023 11:41:12am
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்: அன்புமணி

சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தோற்று நோய்கள் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே இன்ஃபுளூயன்சா காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோய்களும் மழைக்கால தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால், நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும். இந்த ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை தமிழக அரசு உணர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo