இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மாணவர் சமூகநீதி விடுதியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

by Admin / 17-07-2026 11:10:37pm
இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மாணவர் சமூகநீதி விடுதியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

இன்று தமிழக முதலமைச்சர் விஜய் சைதாப்பேட்டையில் உள்ள எம். சி. ராஜா மாணவர் சமூகநீதி விடுதியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாணவர் ஒருவர் விடுதியில் உள்ள குறைகளை வெளிப்படையாக பேசினார். அவற்றை பொறுமையாக கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். விடுதியில் வழங்கப்படும் உணவுகளில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாகவும் போராட்டம் நடத்தினால் ஐந்து நாட்கள் நல்ல உணவை தருவதாகவும் பின் மீண்டும் பழைய படியே குழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள் என்றும் போதிய சமையல் ஊழியர்கள் இல்லை என்றும் சுகாதார முறைப்படி உணவுகள் தயாரிக்கப்படுவதோ இல்லை பரிமாறப்படுவதோ இல்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கழிப்பறைகள் அசுத்தம் நிரம்பியதாக இருப்பதாகவும் கண்காணிப்பு கேமராக்கள் 64 இருக்க வேண்டிய இடத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் அங்கு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்ததோடு படிக்கிற எல்லோரும் ஏழை எளிய மாணவர்கள் பாா்ட் டைம் வேலைபார்ப்பதற்கும் டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயார் ஆவதற்கு வெளியில் சென்று விட்டு இரவு விடுதிக்கு வரும் பொழுது 9: 30-10.30மணி ஆகுது .அந்நேரம் விடுதியை பூட்டி விடுவதால் மாணவர்கள் வெளியே கொசுக்கடியில் தூங்குவதோடு பூங்காக்களுக்கு சென்று தொங்கும் நிலை ஏற்படுவதாகவும் விடுதிக்காப்பாளர்கள் காவலாளிகள் மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் தெரிவித்ததோடு எழுதி வளாகத்தில் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் எளிதாக வந்து செல்வதாகவும் தாங்கள் அவர்களால் மிரட்டப்படுவதாகவும் சொன்னதை முதலமைச்சர் பொறுமையாக கேட்டு அறிந்து உடனடியாக இவற்றிற்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். அவரோடு சமூக நீதித்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் விடுதி வார்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதலமைச்சரின் இந்த திடீர் வருகை மாணவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மாணவர் சமூகநீதி விடுதியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
 

Tags :

Share via

More stories

Logo