கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு

by Editor / 22-06-2022 11:57:52am
கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக காப்பாற்றினார்.எம் வி பீரின்ஸ்  என்ற சரக்கு கப்பல் சரக்குகளுடன் மலேசியா நாட்டில் இருந்து எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென கடலில் ஏற்பட்ட சூறாவளி புயல் காரணமாக அந்த கப்பல் மங்களூர் துறைமுகம் நோக்கி வந்தபோது சுமார் ஒரு கடல்மைல் தொலைவில் தரைதட்டி நின்றது .தகவலறிந்து இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சென்ற கப்பலில் சிக்கித்தவித்த 15 பேரை 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர்.

 

Tags :

Share via
Logo