G.O.A.T படத்தில் நடிக்கும் விஜயகாந்த்

by Staff / 12-02-2024 03:13:14pm
G.O.A.T படத்தில் நடிக்கும் விஜயகாந்த்

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.. இந்நிலையில் ,G..O.A..T படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இப்படத்தில் A I -செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் விஜயகாந்த் கேரக்டரை கொண்டு வர வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டதாகவும், அதற்கு விஜய்யும் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது...A.I தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் விஜயகாந்த் G.O.A.T படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அட்டகாசமான சண்டை காட்சிகளில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது..

 

Tags :

Share via