உத்தர பிரதேச ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆன்மிக பயணத்தில், நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில், இன்று உத்தர பிரதேச மாநிலம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலுடன் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :