"நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்"முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுத்தியுள்ளார். மேலும் அவர், "நீட் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் அதன் சமத்துவமின்மையை காட்டுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது. தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் பாதிக்கும் மோசடி" என்று கூறியுள்ளார்
Tags :
















.jpg)


