மீண்டும் புத்துயிர்பெறும் ராமஜெயம் வழக்கு.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருச்சி மாநகரப் போலீஸ் முதல் சி.பி.ஐ. வரை பல்வேறு விசாரணைக் குழுக்கள் விசாரித்தும் கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமாருக்குப் பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : மீண்டும் புத்துயிர்பெறும் ராமஜெயம் வழக்கு.