சீனாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் அண்டை நாடான ஆஸ்திரேலியா கவலை

by Staff / 20-04-2022 01:29:04pm
சீனாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் அண்டை நாடான ஆஸ்திரேலியா கவலை

தென் பசிபிக் தீவு நாடான சாலமன் தீவுகள் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டு உள்ளதாக சீனா தெரிவித்துள்ள நிலையில் அதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சீனா பாதுகாப்பு மற்றும் கடற்படை கப்பல்களை அதிதீவிர நிலைநிறுத்த . வரைவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் தீவில் சீன ராணுவ தளத்தை அமைக்க அனுமதி மறுத்துள்ளதாக சாலமன் தீவுகளில் பிரதமர் தெரிவித்துள்ளார் . இந்த ஒப்பந்தத்தால் சாலமன் தீவில் சீனப் படைகள் நிறுத்த வழிவகை கிடைத்துள்ளதால் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் தீவில் இருந்து 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மீது இந்த ஒப்பந்தத்தால் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via