குற்றாலத்தில் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள்.

by Editor / 06-07-2022 08:37:18pm
குற்றாலத்தில் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள்.

குற்றால சீசன் தொடங்கியதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்.குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் சுகாதாரத் துறையினர் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பு.தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம் இந்த பகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் தென் மேற்கு பருவ மழைக் காலம் என்பதால் இங்கு சீசன் காலமாகும் இந்த சீசன் காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம்  குளிக்க வந்து  செல்வார்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவதற்கும்  அருவியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.     தற்போது  குற்றாலத்தில் சீசன் தொடங்கிய நிலையில்  நாட்டில்  கொரோனா  தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிய வேண்டும் தனி மனிதர் இடைவெளியை பின்பற்ற வேண்டும், தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் குற்றாலம் மெயினருவி செல்லும் பாதையில் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் பணியினை தொடங்கி உள்ளனர்.சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கை களில் குற்றாலம் பகுதிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அருவி பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றாலத்தில் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள்.
 

Tags : kutralam

Share via