15லட்சம் மோசடி: ஒருவர் கைது..
கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 10வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் உஷாதேவி, 45. இவரது கணவர் நாராயணன் உடல் நலக்குறைவால், கடந்த ஆக. , 28ம் தேதி உயிரிழந்தார்.உஷாதேவியின் கணவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான லாரியின் ஆவணங்களை, நாகராஜ் என்பவரிடம் கொடுத்த உஷாதேவி, அதை விற்றுத் தருமாறு கூறியுள்ளார்.
கடந்த ஜனவரியில் நாகராஜ், தரகர் வெங்கடேசன் என்பவரின் உதவியுடன் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சதாம் உசேன், 33, என்பவருக்கு, 17 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு லாரியை விற்றுள்ளார்.உஷாராணிக்கு 2 லட்சம் ரூபாய் முன்பணமாக அளித்த நிலையில், மீதி பணத்தை தராமல் மூவரும் தலைமறைவாகி உள்ளனர்.இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட சதாம் உசேனை நேற்று கைது செய்தனர். தலைமறைவான நாகராஜ், வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
Tags :