சிறுமி பலாத்காரம்: 10 ஆண்டு சிறை..

by Staff / 28-11-2023 04:13:26pm
சிறுமி பலாத்காரம்: 10 ஆண்டு சிறை..

சென்னை பெருங்குடி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த, 5 வயது சிறுமி, 2016ம் ஆண்டு பிப். , 23ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக இருந்த, விழுப்புரம் மாவட்டம், சின்னபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல், 53, என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் புகாரை அடுத்து, துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடந்து வந்தது.வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மைக்கேலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15, 000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, நீதிபதி தமிழரசி நேற்று உத்தரவிட்டார்.அதன்பின், மைக்கேல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2. 50 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo