கோழிக்கறியால் நின்று போன திருமணம்

ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் ஜகத்கிரிகுட்டா ரிங் பஸ்தியைச் சேர்ந்த மணமகனுக்கும் குத்புல்லாபூரைச் சேர்ந்த மணமகளுக்கும் திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். இந்த வரிசையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிக்கன் போடாதது ஏன் என தகராறு செய்து சாப்பிடாமல் சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது. ஆனால் போலீசார் அளித்த ஆலோசனையை தொடர்ந்து இரு தரப்பினரிடைய சமாதானம் ஏற்பட்டதை அடுத்து,இம்மாதம் 30ஆம் தேதி மீண்டும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :