வதந்திகளை நம்பாதீர் டி ஆர் உருக்கம்

by Staff / 15-06-2022 11:05:37am
வதந்திகளை நம்பாதீர் டி ஆர்  உருக்கம்

தனது உடல்நிலை குறித்த வதந்திகள் நம்ப வேண்டாம் என்று இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது உடல்நிலை குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி ஆர் ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via