மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த பதவி நடிகர் ரஜினிகாந்த்

by Staff / 11-03-2023 01:30:37pm
மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த பதவி  நடிகர் ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த பதவி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு வருகை பதிவேட்டில் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via