கலைஞரை வீட்டு சிறையில் வைத்ததாக நான் சொல்லவில்லை -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 05-04-2026 06:42:15pm
கலைஞரை வீட்டு சிறையில் வைத்ததாக நான் சொல்லவில்லை -அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டார் என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடுமையான கண்டனம்தெரிவித்தார்.. இதற்கு அ.தி.மு.க  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , கலைஞரை வீட்டு சிறையில் வைத்ததாக நான் சொல்லவில்லை என்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆர். ராசா பேசியதாக கூறப்படும் வைரல் ஆடியோவில் தான் அவ்வாறு உள்ளது. உங்கள் கோபத்தை என் மீது காட்டாதீர்கள் என்றும்  எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். அத்துடன் அதிமுக ஆட்சி அமைந்த உடன் கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்தது தொடர்பாக ஆ. ராசாவின் ஆடியோ அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே ஆ .ராசா வெளியிட்டதாக கூறப்படும் ஆடியோ போலியானது என்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்றும் கூறி அதற்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல். அரசியல் ஆதாயத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்று பேசுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்தது ஒட்டி அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்ட பொழுது, காமராஜருக்கு கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது முன்னாள் முதல்வர்களுக்கு மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என்றும்  வி.என். ஜானகிக்கும் அதே போன்று தான் சொன்னார். நான் முதலமைச்சராக இருந்த பொழுது கலைஞருக்கு நினைவிடம் அமைக்க இடம் வேண்டும் என்று கேட்ட பொழுது அவர் எதைச் சொன்னாரோ அதைத்தான் நான் முதலமைச்சராக இருந்த பொழுது செய்தேன் என்றும் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories

Logo