.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதுதேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
முதலமைச்சராக இருந்தவர். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் .அவருடைய வார்த்தைகளை மதிக்க கூடியதாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு முதலமைச்சர் வேட்பாளராக இருக்கக்கூடியவர் .தவறுதலாக பேசுவது கூடாது. .அவரைபோன்று எங்களாலும் பேசமுடியும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் திருவண்ணாமலை சாமி தரிசனத்திற்கு பிறகு இந்த கருத்தை அவர் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.
உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல், கருகுகிற வாசனை தமிழ்நாடு முழுவதும் வீசுது. 2011 இல் இருந்து 2026 வரைக்கும் உங்க கூட்டணி ல தான் இருந்தோம். ஒரு முதலமைச்சர் வேட்பாளர் இதுபோன்று பேசுவது அழகல்ல .இதை நிச்சயமாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். அவர் கையெழுத்து போட்டது .அண்ணாமலையார் உண்ணாமலையார் கோயில்ல,
இதுவரைக்கும் நான் காமிச்சது இல்லை .இப்ப காட்றேன். எம்பி சீட் அவர் கையெழுத்து போட்டு கொடுத்தது. நான் எங்க போட்டு கொடுத்தேன். அப்படின்னு சொன்னாரு .மரியாத காரணமாக நான் அதை கண்ணியத்துடன் கடைபிடித்தேன் .ஆனா ,இதுவரைக்கும் நான் காமிக்கல. அத இப்ப காட்ட வேண்டிய நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார் .நீங்களே பாருங்கள் .இதை விசுவலா காட்டுகிறேன் என்று சொல்லி அவர் தொகுதி உடன்பாடு குறித்தான ஒப்பந்தத்தை காட்டினார். ஐந்து எம்பி சீட்டு ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என்பதை ஒரு சைடு அவர் கையெழுத்து இன்னொரு சைடு என்னுடைய கையெழுத்தும் இருக்கும். அதை போட்டு இருக்கிறதை பாருங்க 2024ல போட்ட ஒப்பந்தம் இது .2025 இல அவரு எங்களுக்கு ஒரு ராஜ சபா சீட்டு கொடுத்து இருக்க வேண்டும். இதுல வருஷம் போடாம குடுத்தத ஏன் அப்படின்னு கேட்டதுக்கு அது எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா காலத்திலிருந்து அப்படி தான் கொடுப்போம். என் வார்த்தை தான் முக்கியம். அப்படின்னு சொன்னாரு .அதை நான் நம்பினேன் .ஆனா அவரு நான் எங்க அம்மா சொன்னேன், அப்படின்னு சொல்றார். ஏதோ ஏதோ பேசிக்கிட்டு இருக்காரு நான் ராஜ்யசபா சீட்டு கேட்டதுக்கு யார் யாரோ சொல்றதுக்கு நான் பதில் சொல்ல முடியாது அப்படின்னு சொன்னாரு. ஆனா ,நாங்க அண்ணா அவர்கள் சொன்னது போல, கடமை- கண்ணியம்- கட்டுப்பாடு அப்படிங்கிறது கடைபிடிக்கிறேம். எங்க கேப்டனும் அதைத்தான் சொன்னாரு. அந்த மரியாதையோட, அரசியல் மரியாதையோடு நாங்கள் நடத்த நினைக்கிறோம். ஐசியூவில் இருக்கிற கட்சி அப்படின்னு சொல்றாரு. பக்கத்துல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கார். அவருடைய முகம் கூட இறுகி போயிடுச்சு .அதிமுகல இருக்கிற முன்னாள் அமைச்சர்களில் இருந்து கடைக்கோடியில் இருக்கக்கூடிய தொண்டர்கள் வரை ..நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மே நாலாம் தேதிக்கு பிறகு தெரியும். ஐசியூவில இருக்க போறது யாருன்னு .அவர் ஐசியூக்கு போகாம இருக்கணும். அப்படின்னு சொல்லி நான் கடவுளை வேண்டுகிறேன் என்று காட்டமாக பதில் கொடுத்தார்.
Tags :













.jpg)





