உத்திர பிரதேசம்: முதலிரவில் உயிரிழந்த புதுமணத் தம்பதி

உத்திர பிரதேச மாநிலத்தில் முதல் இரவில் புதுமணத் தம்பதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோதியா கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (24) மற்றும் புஷ்பா யாதவ் (22) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டனர். வியாழக்கிழமை இரவு, அவர்கள் தங்கள் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, உடல் நலக்குறைவு ஏதும் இல்லை என்றும், அறையில் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
Tags :