களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 11 புலிகள்- அதிகாரி தகவல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மி தூரம் ஓடி வந்து துணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.
இது சம்பந்தமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், துணை இயக்குனர் செண்பகபிரியா கூறுகையில் இந்த உலக புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகள் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டடு வருகிறது. தற்பொழுது உலகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70% இந்தியாவில் உள்ளது.தற்பொழுது களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் 11 புலிகள் பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
Tags :