ஃபெங்கல் புயல் எதிரொலி - புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.

by Editor / 27-11-2024 10:10:22pm
ஃபெங்கல் புயல் எதிரொலி - புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று காலை முதல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்க கூடாது என காவல்துறை அறிவுறுத்தியும், ஆபத்தை உணராமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி செல்பி எடுத்து, விளையாடி மகிழ்ந்தால் கடற்கரை சாலையை காவல்துறையினர் மூடி உள்ளனர்.
கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் கடற்கரை சாலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

Tags : ஃபெங்கல் புயல் எதிரொலி - புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.

Share via