மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூபாய் 8000திலிருந்து ரூபாய் 20000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
சட்டப்பேரவையில் இன்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மீனவர்களுக்கான முக்கிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி வருடாந்திர மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூபாய் 8000திலிருந்து ரூபாய் 20000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கடலுக்கு சென்று மர்மமான முறையில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி நாளொன்றுக்கு ரூபாய் 350 இலிருந்து ரூபாய் 600 ஆக உயர்த்தப்படும் என்றும் கடலில் மீன் பிடிக்கும் போது அண்டை நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி வாழ்வாதார படி ரூபாய் 500 இல் இருந்து ரூபாய் 600 உயர்த்தப்படும் என்றும் வடகிழக்கு பருவமழை போன்ற மீன்பிடி குறைவு காலங்களில் பாரம்பரிய மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவி தொகை ரூபாய் 6 ஆயிரத்தில் இருந்து 7000 ஆக உயர்த்தப்படும் என்றும் இதற்காக அரசு 135 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் மீட்க முடியாத நிலைமையில் சேதம் அடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு விசைப்படகுகளுக்கு தலா 8 லட்சமும் நாட்டு படங்களுக்கு தலா 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 1.86 கோடி நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags :


















