அமைச்சர்.ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இன்று அமலாக்கத்துறை தன் மீது எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிய அதிகார அமைப்பை அணுகாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு வந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த சொத்து மதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2006 -2011 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2.1 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Tags :



















