வெள்ளத்தில் சிக்கி 49 பேர் பலி

by Editor / 12-06-2025 01:42:46pm
வெள்ளத்தில் சிக்கி 49 பேர் பலி

காலநிலை மாற்றத்தின் காரணமாக, தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories